கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்
x

கோட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. வட்ட தலைவர் உத்திரகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் ஜெயச்சந்திரன், வட்ட கவுரவத் தலைவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் காளிமுத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் கோட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்தி குறைகளை களைய வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பணி தேர்விற்கு 10-ம் வகுப்பு தகுதி என்பதை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த 22-ந் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்திற்கு சங்க நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட, வட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.


Next Story