பந்தலூர் அருகே மளிகை, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
பந்தலூர் அருகே மளிகை, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே மளிகை, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
காட்டு யானை
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே புஞ்சகொல்லி, சப்பந்தோடு காவயல் உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டு யானைகள்
புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து மிதித்து நாசம் செய்து வருகிறது. சாலையில் நடந்துசெல்லும் பொதுமக்களையும் மாணவ-மாணவிகளையும் தொழிலாளர்களையும் துரத்தி வருகிறது. இந்த நிலையில் புஞ்சகொல்லி பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு யானை யானை ஒன்று புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. சாலையில் சென்ற ஆட்டோக்களையும் தனியார் வாகனங்களையும் துரத்தியது. இதனால் பொதுமக்கள்ஓட்டம் பிடித்தனர்.
மளிகை கடை சேதம்
இந்த நிலையில் அந்தபகுதியில் சக்கீர் என்பவரது மலிகை கடையை உடைத்து அரிசி மூட்டையை தும்பிக்கையால் வெளியே இழுத்து போட்டு தின்றது மேலும் காய்கரிகளையும் தின்று மிதித்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த யானை ரேஷன் கடையின் ஜன்னலை தந்தால் குத்தி ஓட்டை போட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை நாசம் செய்தது. தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் அட்டகாசம் செய்துவரும் காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.