வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை


வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை
x

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

ஆனால் இந்த வீடியோக்களுக்கும் மேற்கண்ட பகுதிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ், சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் தெரிவிக்க மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன..

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். பீகாரில் இருந்த வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்துகின்றனர். மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


Next Story