சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் குஜராத் பக்தர்
சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் குஜராத் பக்தர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ரபிக் போலோ (வயது 64). இவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் ஆன்மிக பயணம் செய்து வருகிறார். நேற்று நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சைக்கிளில் இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். 3½ மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன். நெல்லையப்பரை தரிசனம் செய்து விட்டேன். இனி கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்ல உள்ளேன்' என்றார்.
Related Tags :
Next Story