சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி


சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி
x

அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தை கிராமத்தில் அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சந்திரசேகர் உடனுறை சிவகாமி அம்பாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவர்கள் பிரகாரத்தை சுற்றி வளம்வந்தனர். பின்னர் கோவில் வாசல் முன்பு அமைத்திருந்த 6 அடி உயர பனை மட்டையால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையை தீபமேற்றி கொளுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம், விளந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story