மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்


மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்
x

குடும்ப தகராறில் மனைவியை தூக்கிட்டு கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர்

கொலை முயற்சி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அருள் (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹரிபிரசாத்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று குவாகம் பகுதியில் உள்ள சிறைமீட்டார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்து 2 பேரும் ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுக்கூர் குவாகம் மருங்கூர் பென்பரப்பி இடையே உள்ள முந்திரி தோப்பு பகுதியில் வரும்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

கணவருக்கு வலைவீச்சு

இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது மனைவி அருள் கழுத்தில் கயிற்றைப் போட்டு முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி இழுத்துள்ளார். இதனால் அருள் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நேரத்தில் அப்பகுதியில் பொக்லைன் ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, அருள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ‌ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story