மின்னல் தாக்கி ஜல்லிக்கட்டு காளை சாவு


மின்னல் தாக்கி ஜல்லிக்கட்டு காளை சாவு
x

மின்னல் தாக்கி ஜல்லிக்கட்டு காளை இறந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மங்கப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் குமார்(வயது 42). இவர் பசுக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். அப்பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அவர் மேய்ச்சலில் இருந்த பசுக்களை தோட்டத்தில் இருந்து கொட்டகைக்கு ஓட்டிச்சென்றார். அப்போது ஜல்லிக்கட்டு காளை கட்டப்பட்டிருந்த புளியமரத்தில் மின்னல் தாக்கியது. இதில் அந்த காளை பரிதாபமாக செத்தது.


Next Story