ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை


ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை
x

ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை,

ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடி-உதை

சிவகங்கையை அடுத்து உள்ள கோமாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41). சம்பவத்தன்று இரவு அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் சிலர் மது குடித்துக்கொண்டிருந்தார்களாம். இதை பார்த்த ஆனந்தன் அவர்களை கண்டித்தார்.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஆனந்தனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தனை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் விசாரணை நடத்தி கோமாளிபட்டி கிராமத்தை சேர்ந்த வாசு என்ற வாசுதேவன் (32), முனியசாமி (22), விக்னேஷ் (25), 18 வயது வாலிபர் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வாசு என்ற வாசுதேவன், 18 வயது வாலிபர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Related Tags :
Next Story