பள்ளி மாணவருக்கு அடி-உதை


பள்ளி மாணவருக்கு அடி-உதை
x

பள்ளி மாணவரை அடித்து உதைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகன் சஞ்சய் (வயது16). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பிய சஞ்சய் நான்கு வழிச்சாலையில் உள்ள ஆயன்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.

அப்போது அவருடன் சக நண்பர்கள் 4 பேரும் இறங்கி நடந்து சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த 2 சிறுவர்கள் சஞ்சையை வழிமறித்து தாக்கினர். இதனால் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடினர்.

ஆனால் சஞ்சையை ஓட ஓட துரத்திய அந்த சிறுவர்கள் இரும்பு பைப்பால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சஞ்சய் உடனே பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story