மது குடிக்கும்போது தகராறு:கட்டிட தொழிலாளிக்கு அடி-உதை


மது குடிக்கும்போது தகராறு:கட்டிட தொழிலாளிக்கு அடி-உதை
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்கும்போது தகராறில் கட்டிட தொழிலாளிக்கு அடி-உதை விழுந்தது.

விழுப்புரம்


விழுப்புரம் காகுப்பம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவருமே ஒன்றாக கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் இருவரும் காகுப்பம் பகுதியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன், தனது நண்பர் கார்த்திகேயனிடம் தனக்கு தர வேண்டிய பழைய பாக்கி தொகை ரூ.100-ஐ தரும்படி கேட்டு அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திகேயன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story