கூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி படுகொலை - தூத்துக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்


கூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி படுகொலை - தூத்துக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

கொலையாளிகள் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகேயுள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தன் மனைவியுடன் தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வேலை முடிந்து ஸ்ரீவைகுண்டம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சுரேஷை வழிமறித்து அரிவாளால் தாக்கிய மர்மநபர்கள், தப்பியோட முயன்ற அவரை, ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில், கொலையாளிகள் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், சுரேஷ் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story