கந்துவட்டி கொடுமையை கண்டித்து புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்...!


கந்துவட்டி கொடுமையை கண்டித்து புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்...!
x

கந்துவட்டி கொடுமையை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளியமரத்தில் தலைகீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வழக்கறிஞரான இவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணை தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் அய்யாலுசாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்கப்படவேண்டும். மேலும், கந்துவட்ட சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வினோத ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்.

அந்த வகையில், கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் வழக்கறிஞர் அய்யாலுசாமி தனது காலில் கயிறுக்கட்டி தலைகீழாக தொங்கி சுமார் 1 மணி நேரம் ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்.

1 More update

Next Story