சாராயம் கடத்திய பெண்ணும் ஸ்கூட்டருடன் பிடிபட்டார்


சாராயம் கடத்திய பெண்ணும் ஸ்கூட்டருடன் பிடிபட்டார்
x

சாராயம் கடத்திய பெண்ணும் ஸ்கூட்டருடன் பிடிபட்டார்

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி பகுதியில் சாராயம் விற்பதாக நாகை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிக்கல் - ஆவராணி சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிக்கல் விதை பண்ணை தெரு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மனைவி விஜி (வயது 35) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story