மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு
தூசி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூசி
சென்னை தாம்பரம் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் யோகேஸ்வரன் (வயது 30)
இவர் திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே குண்டியாந்தண்டலம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் ஆர்ப்பாக்கம் - மாமண்டூர் சாலையில் சுருட்டல் கிராமம் அருகே சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கல்குவாரி மேலாளர் மோகன் தூசி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.