அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி


அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
x

அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

நண்பர்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி, கிழக்கு காடு பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் அஜித்குமார் (வயது 24). இவருடைய நண்பர் பாஸ்கர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை பாஸ்கர் ஓட்டினார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.

சாவு

இதில் அஜித்குமார், பாஸ்கர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயம் அடைந்த பாஸ்கரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story