லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு


லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
x

லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சின்னதம்பி (வயது 33), லாரி டிரைவர். இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் சரக்கு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் சின்னதம்பியை அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னதம்பியிடம் பணம் பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சந்துரு (23), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, புதிய காலனியை சோ்ந்த தனசேகரின் மகன் விஷ்ணு (19), பாடாலூர் அண்ணா நகரை சேர்ந்த சதக்கத்துல்லாவின் மகன் சாதிக் பாட்சா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துரு, விஷ்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story