கத்திமுனையில் லாரி டிரைவரிடம் வழிப்பறி; சினிமா பட பாணியில் திருடர்களை துரத்தி பிடித்த போலீசார்


கத்திமுனையில் லாரி டிரைவரிடம் வழிப்பறி; சினிமா பட பாணியில் திருடர்களை துரத்தி பிடித்த போலீசார்
x

காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை சினிமா பட பாணியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

லாரி டிரைவரிடம் வழிப்பறி

காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் லாரியில் பழுதை நீக்கி கொண்டு இருந்த உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகிராமன் என்பவரிடம் 3 வாலிபர்கள் பட்டாக்கத்தியை காண்பித்து மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 2,500 ரூபாயை வழிப்பறி செய்தனர். அப்போது. அவர்களில் ஒருவரது செல்போன் கீழே விழுந்ததை கவனிக்காமல் வழிப்பறி செய்த 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் துளசி மற்றும் போலீசார் மர்ம நபர்கள் தவறவிட்ட செல்போனை கைப்பற்றி அதன் மூலம் தப்பி ஓடிய மர்ம நபர்களின் செல்போன்களை ட்ராக் செய்தனர்.

சினிமா பட பாணியில் துரத்தினர்

அதேநேரத்தில் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து அவர்கள் 3 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் ஒளிந்து இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சினிமா பட பாணியில் 3 வாலிபர்களும் தப்ப முயன்ற போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் படுநெல்லி பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வசிக்கும் மணிகண்டன் (24), அர்ஜூனா (25) ஆகியோர் என தெரிந்தது. மேலும் இவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ஜானகிராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story