லாரி மோதி மின்கம்பம் வளைந்தது
லாரி மோதி மின்கம்பம் வளைந்தது
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் திருச்செனம்பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் குறுக்கே உள்ள மின்கம்பம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த இரும்பு மின்சார கம்பம் வளைந்து கீழே சாய்ந்தது. அந்த மின்கம்பம் சாலையோரம் சாய்ந்த நிைலயில் கிடக்கிறது. இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் வளைந்து சாய்ந்த நிலையில் கிடக்கும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும். மேலும் மின்கம்பிகளையும் மாற்றி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story