சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்


சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
x

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெனகிழக்கு 350 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் இன்று நள்ளிரவு வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து கொண்டே இருக்கும்.

தெற்கு ஆந்திர, வடக்கு தமிழ்நாடு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால் வடதமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களி கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story