பெண் யானையை குத்திக் கொன்ற ஆண் யானை


பெண் யானையை குத்திக் கொன்ற ஆண் யானை
x

யானை உயிரிழப்புக்கான காரணம், ஆண் யானைக்கும் பெண் யானைக்கும் இடையே நடைபெற்ற சண்டைதான் என வனத்துறையினர் கூறினர்.

செங்கோட்டை,

கேரளாவில் ஆரியங்காவு தேக்குமரக் காட்டில் இன்று பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் . இதன் பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்த யானையின் உடலை கால்நடைமருத்துவர் உடற்கூறாய்வு சோதனை செய்தார்.

அப்போது, யானையின் வயிற்றுப் பகுதியில் சுமார் 4 இடங்களில் யானை தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததைகண்டுபிடித்தனர். உடற்கூறாய்வுக்கு பின்பு அதே தேக்குமரக் காட்டில் யானையை குழிதோண்டி வனத்துறையினர் புதைத்தனர்.

யானை உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

இரண்டு யானைகளுக்கு இடையே நடைபெற்ற பயங்கர சண்டையின் காரணமாக இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் .குறிப்பாக பெரிய அளவிலான ஆண் யானை ஒன்று உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் தந்தத்தால் குத்திய காயங்கள் இருக்கிறது.அதன் காரணமாக பெண் யானை உயிரிழந்துள்ளது. இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


Next Story