ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியவர் கைது


ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியவர் கைது
x

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

திருச்சி மலைக்கோட்டை இ.பி. ரோடு கமலா நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). இவர் நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்த போது மணிகண்டன் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர், மணிகண்டனின் சட்டைப்பையில் இருந்த ரூ.100-ஐ திருடினார். இதனை கண்ட மணிகண்டன் அந்த நபரை சக பயணிகள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னை சோழிங்கநல்லூர் காந்தி 1-வது தெருவை சேர்ந்த சரவணன் (47) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story