மின்மோட்டாரை திருட முயன்றவர் கைது


மின்மோட்டாரை திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மின்மோட்டாரை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் ஜெகதீஸ்வரி பழனிக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஆழ்குழாய் மின்மோட்டாரை ஒருவர் திருட வந்தார். அப்போது தோப்பு மேலாளர் தர்மசெல்வம் திருட வந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் நயினார்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் மோட்டாரை திருட முயன்றது சித்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த முனியசாமி(வயது 33) என தெரியவந்தது. தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்தார்.

1 More update

Next Story