கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்


கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)

சின்னகலையம்புத்தூரில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

சின்னகலையம்புத்தூர் ஊராட்சியில் தனியார் நிறுவனம் சார்பில் பட்டா நிலத்தில் கல்குவாரி அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து கல்குவாரி அமைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சின்னக்கலையம்புத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சசிக்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சின்ன கலையம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா வேணுகோபால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயி சங்கப் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்குவாரி அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், பழனியில் ஏற்கனவே உள்ள குவாரிகள் சுற்றுச்சூழல் நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. அதனால் புதிய குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.


Next Story