சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் திடீர் மயக்கம் - பரபரப்படைந்த மாமன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் திடீர் மயக்கம் - பரபரப்படைந்த மாமன்ற கூட்டம்
x

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், வார்டு உறுப்பினர் ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், வார்டு உறுப்பினர் ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாமன்ற கூட்டத்தின்போது, 14-வது வார்டு உறுப்பினர் பானுமதி மயக்கம் அடைந்தார். இதையடுத்து உடனிருந்த உறுப்பினர்கள், அவரை ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தூக்கிச் சென்றனர். செவிலியர் ஒருவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

மேயர் பிரியாவும், மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் இருக்கைக்கு வந்து உதவி செய்தனர்.

Next Story