திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை


திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மா்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய பெண். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் திண்டிவனம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்து துன்புறுத்தியதோடு, அவருக்கு பாலியல் தொல்லையும் அளித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story