மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
x

உவரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே நவ்வலடி நடுத்தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. இவர் தினமும் மது அருந்தி வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவத்தன்று மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story