ரூ.42 கோடி கடனில் சிக்கிய மில் அதிபர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.42 கோடி கடனில் சிக்கிய மில் அதிபர் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.42 கோடி கடனில் சிக்கிய மில் அதிபர் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மில் அதிபர்
கோவை விளாங்குறிச்சி எஸ்.ஆர்.அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44). இவருடைய மனைவி பிந்து (40). இவர்க ளுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிக ளுக்கு விற்பனை செய்து வந்தார்.
மேலும் அவர் தொழிலை விரிவுபடுத்துவதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அதிகளவில் கடன் வாங்கி உள்ளார். மேலும் வங்கிகளிலும் அதிகளவில் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த வகையில் அவர் மொத்தம் ரூ.42 கோடிக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தொழிலில் நஷ்டம்
இந்த கடனுக்காக அவர் தவணைத்தொகையை செலுத்தி வந்து உள்ளார். ஆனாலும் அவருக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வித்யா சங்கர் கடனுக்குரிய தவணைத்தொகை மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கிடையே கடன் கொடுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ய தொடங் கினர். ஒரு கட்டத்தில் அவருடைய செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ஆன்லைனில் விஷம் ஆர்டர்
இது பற்றி அவர் வீட்டில் சொல்ல முடியாமலும், யாரிடமும் உதவி கேட்பது என்று தெரியாமலும் தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்தார். அந்த விஷம், 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு கிடைத்தது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் மில்லுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு காரில் வித்யா சங்கர் புறப்பட்டார். ஆனால் அவர் திருப்பூரில் உள்ள தனது மில்லுக்கு செல்லவில்லை. அவர், கோவை அருகே தொண் டாமுத்தூர் தேவராயபுரத்தை அடுத்த பூதிப்பள்ளம் வந்து சாலை யோரத்தில் காரை நிறுத்தினார்.
பின்னர் அவர், காரின் கதவை பூட்டிக் கொண்டு, ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு உள்ளே யே படுத்து விட்டார். இதற்கிடையே அந்த பகுதியில் நீண்டநேர மாக ஒரு கார் நிற்பதை பார்த்த பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர்.
காருக்குள் பிணம்
அந்த காருக்குள் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். இதனால் அவர்கள் காரின் கதவை தட்டிப் பார்த்தும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் அந்த காரின் கதவை திறந்து பார்த்த போது வித்யா சங்கர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அந்த காரில் விஷப்பாட்டிலும் இருந்தது. உடனே போலீசார் அவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டைரி சிக்கியது
மேலும் வித்யாசங்கர் இருந்த காரில் ஒரு டைரியும் இருந்தது. அந்த டைரியில் யாரிடம் எல்லாம் எவ்வளவு கடன் வாங்கப் பட்டு இருக்கிறது, எவ்வளவு பணம் திரும்ப கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த தகவலும் இடம் பெற்று இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும் போது, வித்யாசங்கர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டதாலும் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆனால் அவர் எப்போது ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து வாங்கினார் என்பதுதான் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.