மேம்பாலத்தில் இருந்து கீழே ரோட்டை நோக்கி ெபட்ரோல் குண்டுகளை வீசிய கும்பல்
மேலூரில் பட்டப்பகலில் மேம்பாலத்தில் இருந்து கீழே ரோட்டை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு கும்பல் தப்பி விட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்,
மேலூரில் பட்டப்பகலில் மேம்பாலத்தில் இருந்து கீழே ரோட்டை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு கும்பல் தப்பி விட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சிவகங்கை ரோட்டில் நான்கு வழி சாலையில் உயர்மட்ட பாலம் உள்ளது. மேலூரில் இருந்து பகல் 3 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை அந்த பாலத்தின் கீழே ரோட்டில் வீசி உள்ளனர். கீழே விழுந்ததில் 3 பெட்ரோல் குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மேம்பாலத்தில் நின்றிருந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
போலீசார் தீவிர விசாரணை
மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய போது சாலையில் யாரும் வரவில்லை. இருப்பினும் அந்த கும்பல் யாரையும் கொலை செய்யும் நோக்கத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றார்களா? அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா? என பல்வேறு ேகாணங்களில் விசாரித்தனர்.
அதோடு அருகில் கடை வைத்திருப்பவர்களிடமும், அந்த பகுதியில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவதுண்டு. ஆனால் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் 25 வயதை சேர்ந்தவர்கள் என்றும், குடிபோதையில் வந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாகவும், அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை ேமம்பாலத்தில் இருந்து கீழே வீசி சென்றதாகவும் தெரிய வந்தது. அந்த நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் மேலூர் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.