போலீஸ்காரர் துணையுடன் பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தாய்...! மதுரையில் பிடிபட்ட கும்பல்


போலீஸ்காரர் துணையுடன் பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தாய்...! மதுரையில் பிடிபட்ட கும்பல்
x
தினத்தந்தி 8 Sept 2022 3:30 PM IST (Updated: 8 Sept 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட போலீஸ்காரர் தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட போலீஸ்காரர் தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண்கள் காப்பகத்தில் சேர்ப்பு மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர் கோ.புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர. அப்போது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அங்கு வாடகை வீட்டை பிடித்து விபச்சாரத்தை ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(49) மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசி(42) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபச்சார விடுதி நடத்தி வந்ததும் அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும் நேற்று மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் சுமதியின் மகள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story