தேசிய ஊடக குழுவினர் பார்வையிட்டனர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ச்சி பணிகளை தேசிய ஊடக குழுவினர் பார்வையிட்டனர்
கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. அது போன்று ரேஸ்கோர்ஸ் சாலை, ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை ஆகிய சாலைகள் மாதிரி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிட தேசிய ஊடக குழுவினர் கூடுதல் நிர்வாக இயக்குனர் ராஜிவ் ஜெயின் தலைமையில் கோவை வந்தனர்.
அவர்களை மாநகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் அந்த குழுவுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் விளக்கி கூறினார்.
பின்னர் கூடுதல் நிர்வாக இயக்குனர் ராஜிவ் ஜெயின் கூறுகை யில், நமது நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை நாங்கள் நேரில் பார்வையிட்டு உள்ளோம். ஏற்கனவே உஜ்ஜெயின், சிம்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள பணிகளை பார்வையிட்டு இருந்தோம்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு உள்ள பணிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செய்யப்பட்டு உள்ள பணிகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கிறது. மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கிறது என்றார்.