ரூ.2¼ கோடியில் புதிதாக 4 வழிச்சாலை


ரூ.2¼ கோடியில் புதிதாக 4 வழிச்சாலை
x

வேலூர் விமான நிலையம் பகுதியில் ரூ.2¼ கோடியில் நடைபெறும் புதிய 4 வழிச்சாலை பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய 3 உட்கோட்டங்கள் உள்ளன. இந்த உட்கோட்டங்களில் ரூ.4 கோடியே 40 லட்சத்தில் சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிதாக சிறுபாலம் கட்டுதல், புதிய தார்சாலை அமைத்தல், பழைய சாலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூர் அப்துல்லாபுரம் கூட்ரோடு முதல் விமான நிலையம் வரையிலான சாலை ரூ.2 கோடியே 26 லட்சத்தில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா? சாலையின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த பகுதியில் சாலையோரத்தில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டார்.

முன்னதாக அவர், திருப்பத்தூர் ஆவாரங்குப்பம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ.18 கோடியே 40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் ஞானவேல், வேலூர் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தனசேகரன், திட்டங்கள் கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரகாஷ், (தரக்கட்டுப்பாடு) ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story