பேரூராட்சி மன்ற தலைவருக்கு புதிய கார் வழங்க வேண்டும்நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு


பேரூராட்சி மன்ற தலைவருக்கு புதிய கார் வழங்க வேண்டும்நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
x

பழுது சாிசெய்வதில் ஷோரூமில் சேவை குறைபாடு ஏற்பட்டதால் பேரூராட்சி மன்ற தலைவருக்கு புதிய கார் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

சேவையில் குறைபாடு

அரகண்டநல்லூரை சேர்ந்தவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராகவும், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு ஷோரூமில் ரூ.13 லட்சத்து 40 ஆயிரத்து 594-க்கு புதிய கார் வாங்கினார். அந்த கார் வாங்கிய சில நாட்களிலேயே அடிக்கடி பழுதானது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் சர்வீஸ் ஷோரூமில் பழுதுநீக்கம் செய்ய காரை கொடுத்தும், அதை முறையாக சாிசெய்து தரவில்லை எனவும், அதனால் தன்னை சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் ஏமாற்றி விட்டதாகவும் கூறி விழுப்புரம் மாவட்ட அமர்வு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராயல் எஸ்.அன்பு வழக்கு தொடர்ந்தார்.

புதிய கார் வழங்க...

வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட அமர்வு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட ராயல் எஸ்.அன்புவுக்கு புதிய கார் வழங்க வேண்டும் என்றும், சேவை குறைபாட்டிற்காக ரூ.50 ஆயிரம் இழப்பீடும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story