பழைய பேராவூரணி அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்


பழைய பேராவூரணி அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்
x

பழைய பேராவூரணி அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்

தஞ்சாவூர்

பேராவூரணி

மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பழைய பேராவூரணி அரசு பள்ளிக்கு புதிய வகுப்பபை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு

பள்ளி மேலாண்மை குழு தலைவர் லீலா, உறுப்பினர்கள் நீலகண்டன், குமரேசன், செல்வகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் அசோக்குமார் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்டம் பழைய பேராவூரணியில் போலீஸ் நிலையம் அருகில் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிறது.

புதிய வகுப்பறை கட்டிடம்

தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மழை நேரங்களில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story