போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும்


போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும்
x

(பாக்ஸ்)போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீசார் அனைவரும் கடந்த 2017-ம் ஆண்டு டி.ஜி.பி. அலுவலகம் வாயிலாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்பின்பு போலீசாருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த அடையாள அட்டை காலாவதியாகி விட்டதாகவும், அதை தான் தற்போதும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை போலீசாருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை டி.ஜி.பி.யால் வழங்கப்பட்டது. அந்த அடையாள அட்டையை தான் தற்போது வரை பலர் பயன்படுத்தி வருகின்றனர். பதவி நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்ட அடையாள அட்டை தற்போது பயன்படுத்த முடியாமல் உள்ளது. அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதவி நிலையில் தற்போது யாரும் இல்லை. காவலர்கள் முதல்நிலை காவலர்களாகவும், முதல்நிலை காவலர்கள் தலைமை காவலர்களாகவும் என அனைவரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு சிறப்பு பிரிவில் பணியாற்றியவர் வேறு சிறப்பு பிரிவுக்கோ அல்லது போலீஸ் நிலையத்துக்கோ, வேறு மாவட்டத்துக்கோ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அப்டேட் செய்து புதிய அடையாள அட்டை வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் சென்று வர போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story