வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது


வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:41+05:30)

கழுகுமலையில் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை-சங்கரன்கோவில் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சபை ஊழியர் பால்மைக்கேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை அவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பிடிக்க முயன்றபோது அது அங்கிருந்த பீரோவிற்குள் நுழைந்தது. இதுகுறித்து பால்மைக்கேல் கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.


Next Story