பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்... காலில் விழுந்து வணங்கிய நபர் - வைரல் வீடியோ


பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்... காலில் விழுந்து வணங்கிய நபர் - வைரல் வீடியோ
x

கோவையில் ஒன்றரை வயது சிறுவன் பறை இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை,

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பறையிசை பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பறையிசை குழுவினர் கலந்து கொண்டனர். பறை இசைத்து குழுவினர் ஆடி பாடி வந்தனர். பறையிசை குழுவினரை ஆர்வத்துடன் கண்ட இனியன் என்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு, இசைக்குழுவினர் சிறிய பறையை வழங்கினர்.

இதையடுத்து சிறுவனும் பறை இசைத்தபடி பேரணியில் நடக்க தொடங்கினான் அதை, அங்கிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அப்போது சிறுவன் பறை அடித்தை கண்ட நபர் ஒருவர் சிறுவனுக்கு அருகில் வந்து சிறுவனுக்கு முன் காலில் விழுந்து கண்ணீர் மல்க தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.




1 More update

Next Story