அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

கால்நடை சந்தை

அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு ஈரோடு, பவானி, பர்கூர், மேட்டூர், மேச்சேரி, கொங்கணாபுரம், எடப்பாடி, கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.

கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

எருமை மாடு

பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.25ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.75 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலைபேசி வாங்கி சென்றனர்.


Next Story