பார்வையாளர்களை கவர்ந்த கலைநிகழ்ச்சி


பார்வையாளர்களை கவர்ந்த கலைநிகழ்ச்சி
x

குடியரசு தின விழாவில் நடந்த பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெரம்பலூர்

குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கோலாட்டமும், சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கண்களை துணியால் கட்டி கொண்டு தலையில் கரகம் வைத்து ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேற்கண்ட 2 பள்ளிகளும் ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் நடந்த கலைதிருவிழா போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் தலா 3 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 185 மாணவ-மாணவிகள் தேசப்பற்று தொடர்பான கலை நிகழ்ச்சியை நடத்தினர்.


Next Story