தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை


தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
x

தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு

தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் விலை வீழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் மலை பகுதிகளை தவிர்த்து அனைத்து வட்டாரங்களிலும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தேங்காயை உடைத்து காயவைத்து கொப்பரை தேங்காயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட இடைவெளியில் பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

தென்னை மட்டை

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, 'கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரத்துக்கும், ஒரு தேங்காய் ரூ.12 வரையிலும் விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு டன் 22 ஆயிரத்திற்கும், ஒரு தேங்காய் ரூ.9 வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர்ந்து உற்பத்தி அதிகளவில் காணப்படுவதால் தேங்காய் விலை மேலும் குறையும் நிலை உள்ளது. இதுபோல வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணமாக உள்ளது.

இதுபோல் தென்னை மட்டைகளில் இருந்து நார் பிரித்து எடுக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டு விவசாய பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளுக்கு தென்னை நார் ஏற்றுமதி குறைந்ததுள்ளதால் கிடங்குகளில் தென்னை மட்டைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. மேலும் தென்னை மட்டைகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story