கல்வராயன்மலையில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
கல்வராயன்மலையில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் உரிமம் இன்றி ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மொட்டையனூர் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(வயது 52) என்பவர் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அண்ணாமலையை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story