கருப்பூர் அருகே உதவி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது
கருப்பூர் அருகே உதவி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
கருப்பூர்:
சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் மனைவி சுகன்யா (வயது 35), இவர், கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியயைாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்தொடர்ந்து வந்த நபர், சுகன்யா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். இதற்கிடையே சுகன்யாவிடம் நகை பறித்தது ஓமலூர் தாலுகா நாரணம்பாளையம் செகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (32) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பவுன் நகையை மீட்டனர்.
Next Story