தூத்துக்குடியில் எலக்ட்ரானிக் கடையில் திருடியவர் கைது


தூத்துக்குடியில் எலக்ட்ரானிக் கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கோமதி பாய் காலனியைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் லிங்கராஜ் (வயது 38). இவர் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோடு பகுதியில் சொந்தமாக எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் கடையை திறந்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த மின்சார ஒயர்களை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி எஸ். எஸ். பிள்ளை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித் குமார் (21) என்பவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த மின் ஒயர்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா, விரைந்து சென்று அஜித்குமாரை கைது செய்தார். அவரிடம் இருந்த ரூ.37 ஆயிரத்து 600 மதிப்பிலான மின்சார ஒயர்களையும் மீட்டார்.


Next Story