சாராயம் விற்க முயன்றவர் கைது


சாராயம் விற்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே சாராயம் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள அவிரியூர் பகுதியில் மா்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எகால் கிராமத்தை சேர்ந்த ஜான் பீட்டர்(45) என்பவர் அவரது நிலத்தில் விற்பனை செய்வதற்காக சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 75 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story