மீன்பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி பலி
மீன்பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி அருகே சின்னகுன்றகுடியை சேர்ந்தவர் பொன்னழகு(வயது 52). இவர் சம்பவத்தன்று ஓ.சிறுவயல் கண்மாயில் மீன்பிடிக்க மகள், மற்றும் மருமகனுடன் சென்றார். மதிய நேரம் மகளையும் மருமகனையும் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் மீன் பிடித்து விட்டு வருவதாக சொல்லி மீன் பிடித்துக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கண்மாய்க்கு சென்று பார்த்த போது நீரில் தவறி விழுந்து அவர் மூழ்கினார். உடனே அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story