திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து சாவு


திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து சாவு
x

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் கிரிவலப் பாதை செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story