அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கொட்டாம்பூண்டி ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் கொட்டாம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கொட்டாம்பூண்டி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story