சாலை தடுப்பில் கார் மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பலி


சாலை தடுப்பில் கார் மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பலி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் சாலை தடுப்பில் கார் மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்

சூலூர்

சூலூரில் சாலை தடுப்பில் கார் மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இன்ஸ்பெக்டர் மகன்

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் மருதாசலம். திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி (வயது 18). கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்க கார்த்திக் ஸ்ரீபதி தனது நண்பரான ஹரி(18) என்பவருடன் செங்கப்பள்ளிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலையில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை ஹரி ஓட்டினார். அவரது அருகில் கார்த்திக் ஸ்ரீபதி அமர்ந்திருந்தார்.

விபத்து

அவினாசி-கோவை ரோட்டில் மைலம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, திடீரென ஹரியின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. தொடர்ந்து சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ஸ்ரீபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி, படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து, சூலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பிரேத பரிசோதனை

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், ஹரியை மீட்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த கார்த்திக் ஸ்ரீபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story