வேன் மோதி அஞ்சலக ஊழியர் பலி
வேன் மோதி அஞ்சலக ஊழியர் பலியானார்.
ராமநாதபுரம் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 35). இவர் ராமநாதபுரம் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாரிசெல்வம் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இட்லி கடையில் சாப்பாடு வாங்குவதற்காக வந்தார். சாப்பாடு வாங்கிவிட்டு மின்சார ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாரிசெல்வம் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மாரிசெல்வம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உச்சிப்புளி நாகாச்சி கேணிக்கரைவலசையை சேர்ந்த டிரைவர் கண்ணனை(44) தேடிவருகின்றனர்.