ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு


ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x

விராலிமலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காமராஜர் நகர், கடைவீதி, சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கழகத்தின் ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்திட வாருங்கள் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது விராலிமலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டி இருப்பது விராலிமலை அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story