சாலையில் சாய்ந்த மின்கம்பம்


சாலையில் சாய்ந்த மின்கம்பம்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் மின்கம்பம் சாய்ந்தது

சிவகங்கை

காளையார்கோவிலில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கல்லல் ரோடு சந்திப்பில் முக்கிய கடைவீதியில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. மிகுந்த சத்தத்துடன் தீப்பொறியுடன் மின்கம்பம் விழுந்தவுடன் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். காளையார்கோவிலில் வாரச்சந்தை நடைபெறுவதால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக வந்து மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காளையார்கோவில் நகர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.


Next Story